tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 ராமு-சோமு ஜோக்ஸ்

Go down 
AuthorMessage
மதன்
Super Hero Member
Super Hero Member
மதன்


Posts : 506

ராமு-சோமு ஜோக்ஸ் Empty
PostSubject: ராமு-சோமு ஜோக்ஸ்   ராமு-சோமு ஜோக்ஸ் EmptyThu Jan 03, 2013 12:05 am

ராமு-சோமு ஜோக்ஸ் Download_zps3bb2fbde

ராமு-சோமு சிரிப்புகள்

ராமு : எல்லாப் பொண்ணுங்களையும் கூடப் பொறந்த சகோதரியா பாக்குறேன்டா

சோமு : உன் பார்வையப் பார்த்தால் அப்படித் தெரியலியே.....

ராமு : உன் கூடப் பிறந்த சகோதரியா நினச்சுப் பாக்குறேன்டா - மச்சி.


ராமு : நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?

சோமு : ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க


ராமு : கல்யாணமான புதுத் தம்பதியர் என்னென்ன கத்துக்கிறாங்க?

சோமு : புருசன் சமயல் பண்ண கத்துக்கிறான்.

ராமு : பொண்டாட்டி சண்டை போடக் கத்துக்கிறா.


ராமு : நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...

சோமு : வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.


ராமு : "அந்த டாக்டர், அஞ்சல் வழியில் சட்டம் படிக்கிறார்"

சோமு : "எதுக்கு?"

ராமு : "ஆபரேசன் பண்ண வர்றவங்களுக்கு அவரே உயில் எழுதப் போறாராம்".


ராமு : நிலம் எங்க மாமனார் வாங்கித் தந்தது. வீடு கட்டற செலவு பெண்டாட்டி ஆபீஸில் லோன் போட்டு

வாங்கியது. வீட்டுல இருக்கிற பொருள் எல்லாம் மச்சான் பாரீன்ல இருந்து அனுப்பி வைச்சது .. .. எப்படி இருக்கு என்

வீடு ?

சோமு : ம் .. .. .. உங்க வீடா ?


சோமு : நான் தினமும் ரத்தம் குடுக்கிறேன்.

ராமு : அப்படியா ! எங்க வேலை பாக்குறீங்க?

சோமு : "கசாப்புக் கடையில!!"


ராமு : தீபாவாளி முடிஞ்சு ஒரு மாசமாச்சு. இப்ப உங்க வீட்டுக் கொல்லையில் வெடிச்சத்தம்

கேக்குதே?

சோமு : தீபாவாளிக்கு பத்த வச்சதுதான். இப்பதான் திரிபுடிச்சு வெடிக்குது.



Back to top Go down
மதன்
Super Hero Member
Super Hero Member
மதன்


Posts : 506

ராமு-சோமு ஜோக்ஸ் Empty
PostSubject: Re: ராமு-சோமு ஜோக்ஸ்   ராமு-சோமு ஜோக்ஸ் EmptyThu Jan 03, 2013 12:13 am

ராமு-சோமு ஜோக்ஸ் Download_zps3bb2fbde

ராமு சோமு

ராமு : டெய்லர்களுக்கு பிடிச்ச மாசம் எது ?

சோமு : தை.


ராமு : பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...

சோமு : என்னாச்சு?

ராமு : பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே


ராமு : சுருட்டு கம்பெனி கேஷியர் சுகுமாரன் எங்கே ?

சோமு : அவர், பணத்தை சுருட்டிட்டு ஒடிட்டார்


ராமு : அவரு வியாபாரத்துல படிப்படியா உயர்ந்தவர்

சோமு : எப்படி?

ராமு : முதல்ல செருப்பு வியாபாரம் பண்ணி, அப்புறம் பெல்ட் வியாபாரம் செஞ்சாரு. இப்ப தொப்பி வியாபாரம்

பண்றாரு.


ராமு : குடி குடியை கெடுக்கும்ங்றது சரியா போச்சு

சோமு : எப்படி?

ராமு : எனக்கு கல்யாணம் ஆனதுமே என் மனைவி என்னை குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டா..


ராமு : பேங்க் மேனேஜர் பின்னால ஒருத்தர் அலைஞ்சா எப்படி அலைவாரு?

சோமு : லோன் லோன்-னுதான்


சோமு : அந்த பட்டாசுக்கடைக்காரர் இதற்கு முன்னால் பூக்கடை வைத்திருந்தார் போல் தெரிகிறது ,,,,,,

ராமு : எப்படி சொல்றே ,,,,, ?

சோமு : சரவெடி கொடுங்கன்னா ,,, எத்தனை முழம்னு கேட்கிறாரே


ராமு : என்ன இது .. .. ஷூட்டிங் பார்க்க இவ்வளவு வி.ஐ.பி-க்களா .. .. ?

சோமு : அவங்கள்லாம் சென்ஸார் போர்டு மெம்பருங்க .. ..ஒவ்வொரு ஸீன் எடுக்கறதக்கு முன்னாடி

அவங்க அபிப்பிராயத்தைக் கேட்டுக்கிட்டு எடுக்கறாங்க .. ..





Back to top Go down
மதன்
Super Hero Member
Super Hero Member
மதன்


Posts : 506

ராமு-சோமு ஜோக்ஸ் Empty
PostSubject: Re: ராமு-சோமு ஜோக்ஸ்   ராமு-சோமு ஜோக்ஸ் EmptyThu Jan 03, 2013 12:17 am


ராமு-சோமு ஜோக்ஸ் Download_zps3bb2fbde

ராமு சோமு

சோமு : அந்தப் புதுப்படம் ஆறு மணி நேரம் ஒடுதா .. .. ஏன் ?

ராமு : அதுவா .. .. டைரக்டர் ஒவ்வொரு நடிகரா போய் கதை சொன்னது, தயாரிப்பாளரைப் பிடிச்சது, அப்புறம்

ஸ்டோரி டிஸ்கஷன் எல்லாத்தையும் காட்டறாங்களாம் .. ..


ராமு : நீ சினிமா டைரக்டராவதற்கு முன்னே, ஊர்லே ரைஸ் மில் வெச்சு இருந்தது

பத்திரிகைக்காரங்களுக்குத் தெரிஞ்சிடுச்சு போலிருக்கு

சோமு : இப்ப என்ன ஆச்சு .. .. ?

ராமு : எப்பவுமே அரைச்சமாவையே அரைச்சுண்டு இருக்கார்னு விமர்சனம் எழுதறhங்களே

ராமு : என்னங்க .. .. உங்க படத்துல ஸீனுக்கு ஸீன் அடிதடியா இருக்கே ?

சோமு : பின்னே என்னங்க .. .. பத்தாயிரம் அடில எடுத்த படம்னு நாங்கதான் தெளிவா சொல்லிட்டோமே


ராமு : யோசனையே இல்லாம மெகா சீரியல் மாதிரி படம் எடுத்துட்டோம்

சோமு : அப்புறம்.. என்ன பண்ணுனீங்க..?

ராமு : பேசாம, நாலு இண்டர்வெல் விடறதா முடிவு பண்ணிட்டோம்..


சோமு : அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன்

ராமு : எப்படிச் சொல்றே?

சோமு : நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு


ராமு : என்ன இது .. .. கதாநாயகி, நடிகையைப் போய், எக்ஸ்ட்ரானு சொல்றே ?

சோமு : ஊஹும் .. .. ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் வெச்சுதானே மேக்கப் போட்டுக்கறா .. .. ?


ராமு : பல மொழிகள்ல இருந்து குரூப் டான்ஸர்களை வரவழைச்சு இருக்கீங்களே .. .. நடனத்துக்கு நடனம்

வித்தியாசம் காட்டவா ?

சோமு : ஊஹும் .. .. தொப்புளுக்குத் தொப்புள் வித்தியாசம் காட்டத்தான்


ராமு : எதுக்கு நீங்க சாப்பாட்டுல கோந்தைக் கலந்துக்கறீங்க .. .. ?

சோமு : அப்பதான் சார், சாப்பாடு உடம்புல ஒட்டுது


Back to top Go down
மதன்
Super Hero Member
Super Hero Member
மதன்


Posts : 506

ராமு-சோமு ஜோக்ஸ் Empty
PostSubject: Re: ராமு-சோமு ஜோக்ஸ்   ராமு-சோமு ஜோக்ஸ் EmptyThu Jan 03, 2013 12:21 am



ராமு-சோமு ஜோக்ஸ் Download_zps3bb2fbde

ராமு சோமு

ராமு : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்கிறது சரியாப் போச்சா... எப்படி ?

சோமு : காலையில் மனைவியைத் திட்டினேன், சாயங்காலம் பின்னிட்டா


ராமு : வளவளன்னு பேசாம, சுருக்கமா ஒரே வார்த்தையிலே புரியும்படி சொல்லு.

சோமு : செலவுக்கு 1000 ரூபாய் கடன் வேணும்


ராமு : என்னது... திருவோடு ஃபிலிம்ஸா ?

சோமு : ஆமாம், நாலைஞ்சு பிச்சைக்காரங்க ஒண்ணா சேர்ந்து மெகா பட்ஜெட்ல படம் எடுக்கிறாங்க


சோமு : எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க.. .?

ராமு : பொண்டாட்டி சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறான்னு மத்தவங்க கேலி பண்ணக் கூடாதுல்லே..


ராமு : அவர் பல் டாக்டரா ?

சோமு : எப்படித் தெரிஞ்சது ?

ராமு : பல்லாண்டு வாழ்க-னு வாழ்த்தறதுக்குப் பதிலா , பல் ஆடி - வாழ்கனு சொல்றாரே


ராமு : அவன் சோழர் பரம்பரை, துணிக்கடை வெச்சிருக்கானா... அவன் பெயர் ?

சோமு : குளோத் (ஊடடிவா) துங்க சோழன்


ராமு : கொடுத்த கடன் என்னாச்சு ? எனக்கு வர வர ஞாபக மறதி ஜாஸ்தியாயிட்டே வருது,,,,,,

சோமு : அப்ப இன்னும் கொஞ்ச நாள் பொறுங்களேன் ,,,,

ராமு : எவ்வளவு நாள் ,,,,?

சோமு : உங்களுக்கு முழுசா மறதி ஏற்படற வரைக்கும்.

ராமு : நான் மேலே படிக்கப் போறேன்

சோமு : May-லேதான் விடுமுறை ஆச்சே


Back to top Go down
மதன்
Super Hero Member
Super Hero Member
மதன்


Posts : 506

ராமு-சோமு ஜோக்ஸ் Empty
PostSubject: Re: ராமு-சோமு ஜோக்ஸ்   ராமு-சோமு ஜோக்ஸ் EmptyThu Jan 03, 2013 12:23 am



ராமு-சோமு ஜோக்ஸ் Download_zps3bb2fbde

ராமு சோமு

ராமு : உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே.. உங்களுக்கு தெரியுமா..?

சோமு : எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க...


ராமு : இந்த ஆள் காலடிபடாத இடமே இல்லை இந்தியாவுல...

சோமு : அப்படியா..?

ராமு : ஆமாம்,.. கீழகிடந்த இந்தியா மேப்பை முழுசா மிதிச்சிட்டாரு...


ராமு : இருமல் தாத்தாவை வச்சுப் படம் பண்றீங்களா .. .. ?படம் பேரு என்ன ?

சோமு : "குட் லொக்" .. ..


ராமு : 20 வருஷம் முன்னாடி நீங்க எழுதின கதைகளை இப்பப் படிச்சாலும் நீங்களா இப்படி

எழுதினீங்கன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.

சோமு : உங்களுக்கு ஆச்சரியம் ,,,,, எனக்கு சந்தேகம்.


ராமு : சிகை அலங்காரம் செய்ய வந்த பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே... என்னாச்சு ?

சோமு : பின்னி எடுத்துட்டா


சோமு : என் மனைவி என் மேலே கோபம்னா சமைக்கமாட்டா

ராமு : என் மனைவி என் மேலே கோபம்னா சமைப்பா


ராமு : ஆபீஸில் உன் மேலே குற்றச்சாட்டு எழுந்துள்ளதா ? என்ன ?


சோமு : நான் எழுந்திருக்கிறதே இல்லைன்னு


ராமு : வரதட்சணை வாங்குவது தப்புன்னு முன்னாடி சொன்னீங்க. இப்ப சரின்னு சொல்றீங்களே, ஏன்?

சோமு : அப்ப என் பொண்ணுக்குக் கல்யாணம். இப்ப என் பையனுக்குக் கல்யாணம்.


Back to top Go down
Sponsored content





ராமு-சோமு ஜோக்ஸ் Empty
PostSubject: Re: ராமு-சோமு ஜோக்ஸ்   ராமு-சோமு ஜோக்ஸ் Empty

Back to top Go down
 
ராமு-சோமு ஜோக்ஸ்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கடி ஜோக்ஸ்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: பொதுவான தகவல் - General Information :: சிரிப்போம் சிந்திப்போம்-
Jump to: