tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 நம்பிக்கையைத் தூண்டும் வழிகள்.

Go down 
2 posters
AuthorMessage
மதன்
Super Hero Member
Super Hero Member
மதன்


Posts : 506

நம்பிக்கையைத் தூண்டும் வழிகள். Empty
PostSubject: நம்பிக்கையைத் தூண்டும் வழிகள்.   நம்பிக்கையைத் தூண்டும் வழிகள். EmptyFri Aug 17, 2012 8:43 pm



நம்பிக்கையைத் தூண்டும் வழிகள்.

அடிமனதில் வெற்றிபெற துடிக்கும் எண்ணங்களை வரிசைப்படுத்து..
சிறப்பான வழிகளை தேர்வு செய்..
எப்படி செய்வதென எழுது..
வழக்கமான பணி நேரம் போக இதற்கென நேரத்தை ஒதுக்கு..
தினமும் எப்படி செய்வதென எழுது..
தயார் நிலைக்கு வந்ததும் சரியான சூழலை எதிர் நோக்கு..
தினமும் அதற்காக செயற்படப்போவதை கற்பனை செய், செயலாக்கு..
வெற்றி பெற்றவர் அணுகுமுறையை கையாள்..
தினமும் வெற்றி பெற்றவர்களை பார், படி..
மாதம் தவறாமல் வெற்றி இலக்கை நோக்கி உற்சாகப் பயிற்சியில் ஈடுபடு. .






Back to top Go down
மதன்
Super Hero Member
Super Hero Member
மதன்


Posts : 506

நம்பிக்கையைத் தூண்டும் வழிகள். Empty
PostSubject: Re: நம்பிக்கையைத் தூண்டும் வழிகள்.   நம்பிக்கையைத் தூண்டும் வழிகள். EmptyFri Aug 17, 2012 8:44 pm



2. உனக்குள்ளேயே இன்னொரு மனிதனாக உருவெடுத்து தூண்டுதலை வழங்கி வெற்றி பெறு..

3. வெற்றிக்கும் சாதனைக்கும் அடிக்கல்லாய் அமைவது தன்னம்பிக்கையே.

4. கடந்த கால வெற்றிகளையும் தோல்விகளையும் ஆராய்ந்து அதில் சிறந்ததை தெரிவு செய்..

5. உறங்கப் போகுமுன் உள்ளம் உறுதியாகும்படி மனதில் பேசிப்பழகு… உறுதியுள்ள மனிதரோடு அடிக்கடி பேசிப்பழகு..

6. பகை எண்ணங்களை விட்டொழிந்து தைரியமாக செயற்படு… தோல்வியடைந்தாலும் முழுமையான ஆற்றலை இணைத்து செயற்படு..

7. எப்போதோ சுடுவதற்கு இப்போது ஏன் பயிற்சி என்று கேட்காதே, கேப்டன் சுடச் சொல்லும் போது சுட்டால் குறி தவறிவிடும் நீ பகைவனின் குண்டுக்கு பலியாவாய்.

8. ஒவ்வொரு நாளையும் நிமிடங்களையும், தன் வசமாக்கும் சாகசக்காரராக மாறி ஓர் ஒழுங்கு முறைக்கு கொண்டுவந்து செயற்படுபவனே வெற்றியாளன்.

9. திட்டமிடுவதும் அதன்படி நடப்பதுமே வெற்றி தரும்.

10. வெற்றிபெற எண்ணுபவன் சோர்வதுமில்லை, தடுமாறுவதும் இல்லை.. நடக்கும் என்ற எண்ணத்தோடு செயற்பட்டு, எந்தத் தடைக்கும் அஞ்சாமல் முன்னேற
ு…


Back to top Go down
மதன்
Super Hero Member
Super Hero Member
மதன்


Posts : 506

நம்பிக்கையைத் தூண்டும் வழிகள். Empty
PostSubject: Re: நம்பிக்கையைத் தூண்டும் வழிகள்.   நம்பிக்கையைத் தூண்டும் வழிகள். EmptyFri Aug 17, 2012 8:44 pm



11. உனக்கே நீ ஆணை பிறப்பித்து செயற்பட்டு வெற்றிபெறு, மற்றவரின் ஆணைக்காக பார்த்திருக்காதே…

12. மாறி வரும் விஞ்ஞான உலகத்திற்கு ஏற்றவகையில் தங்களை மாற்றிக்கொள்ள முடியாத காரணத்தாலேயே பலர் தோல்வி அடைகிறார்கள்…

13. எதையும் பின்தள்ளிப் போடாதே கண்டிப்பாய் இன்றே முடித்துவிட வேண்டுமென எண்ணிச் செயற்படு…

14. எவ்வளவுதான் சிந்தனை இருந்தாலும் அதைச் செழுமையாக்கி ஒரே சமயத்தில் வலுவான விதமாக செலுத்த அழுத்தமான நிர்வாகத்திறன் வேண்டும்.

15. எல்லாப்பக்கமும் திரும்பாமல் ஒரே குறியாக ஒன்றைத் தேர்ந்தெடுத்து முழுக்கவனத்தையும் செலுத்தினால் மாபெரும் வெற்றி கிடைக்கும்.

16. வெவ்வேறு திட்டங்களை தூக்கியெறிந்துவிட்டு ஒரே இலக்கை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதில் வரும் சிக்கல்களை ஆராய வேண்டும். அதை வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக தீர்க்க முயல வேண்டும்.

17. ஒவ்வொரு நாளும் பல தடவை வெற்றி பெறுவேன் என்ற சிந்தனையை பல தடவைகள் சொல்ல வேண்டும்.

18. பிறர் நம்மை என்னவாக எண்ண வேண்டுமென நினைக்கிறோமோ அதை நாம் முதலில் எண்ண வேண்டும்.

19. வெற்றி என்பது தானாக வராது மற்றவருக்கு உதவுவதாலும் வரும்.. வெற்றி என்பது கொடுப்பது, பின் அடைவது இது விளையாட்டல்ல நிஜம்.. வெற்றிபெற வைப்பவன் பின் தானும் வெற்றி பெறுவான். வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புகிறாயா முதலில் பாராட்டக் கற்றுக்கொள்.

20. பாராட்டுகிற பழக்கமுள்ளவன் ஒருபோதும் தோல்வியடையமாட்டான் அவனை மற்றவர்கள் தோளில் சுமந்து சென்று வெற்றி மேடையில் அமர வைப்பர
்.



Back to top Go down
மதன்
Super Hero Member
Super Hero Member
மதன்


Posts : 506

நம்பிக்கையைத் தூண்டும் வழிகள். Empty
PostSubject: Re: நம்பிக்கையைத் தூண்டும் வழிகள்.   நம்பிக்கையைத் தூண்டும் வழிகள். EmptyFri Aug 17, 2012 8:45 pm



21. எண்ணங்களோடு உங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள். உணர்வுகளுக்கான நேரம் வரும், நேரம் போகும். எதிர்மறை எண்ணங்களோடு உங்களை இணைத்தால் அதற்கு அடிமையாவது நிச்சயம்.

22. உங்களைச் சுற்றிப்பாருங்கள். உலகம் முழுவதையும் புரிந்து கொள்ள வேண்டியதைப் புகட்டும் பல்கலைக்கழகம் சுற்றியிருப்பதை உணர்வீர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஆழமான விசயம் ஒன்றைப் புரிய வைக்கிறது.

23. நீங்கள் இந்த உலகத்தில் பிறந்ததற்கான காரணம் முழுமையாக நடைபெற வேண்டுமானால் குறைந்தபட்சம் மற்றவருக்கு உதவுவதை நிறுத்தாதீர்கள். ஒருவேளை உங்களால் மற்றவருக்கு உதவ முடியாமல் போனால் அவர்களை வேதனைப்படுத்தாதாவது இருக்கப்பாருங்கள்.

24. அறிவு புத்தகங்களில் இருந்து படிக்கும் ஒன்றல்ல, ஒருவர் பழகும் முறையில் இருந்து அவரிடமுள்ள அறிவின் ஆழத்தைப் படிக்கலாம்.

25. ஒருவர் தொழிலில் முன்னேற வேண்டுமானால் 35 சதவீதமான அறிவு போதமானது. 65 சதவீதம் மற்றவர்களோடு எப்படி பழக வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

26. நீ கேட்க முடியாத ஒரு குரலை நான் கேட்கிறேன், அது சொல்கிறது நீ பின்தங்கிவிடக் கூடாது என்று, அதுபோல நீ காண முடியாத ஒன்றை நான் காண்கிறேன் அது என்னை பொருத்தமான இடத்திற்கு அழைத்துச் செல்கிறது. காணவும் முடியாது, கேட்கவும் முடியாத உன்னை நான் எப்படி பின்பற்றுவது ?

27. தான் செய்ய வேண்டிய வேலையுடன் பிறக்காத மனிதன் எவனும் உலகில் இல்லை. அதை அறிய முன்னரே பிள்ளைகளை பலவந்தப்படுத்தி இன்றய உலகின் மோசமான கல்விக்குள் கட்டாயப்படுத்தித் திணிக்காதீர்கள்.

28. யாரோ ஒருவர் பணம் சம்பாதித்துவிட்டார் என்பதற்காக அவருடைய தொழிலையே நீங்களும் தேர்வு செய்யாதீர்கள்.

29. வாய்ப்பை உபயோகிக்கத் தெரியாத மனிதனுக்கு அதைக் கொடுப்பதால் என்ன பயன் இருக்கப்போகிறது. வாய்ப்பு வந்தும் பலர் செக்குமாடுகளாக இருப்பதற்குக் காரணம், அவர்களுக்கு வாய்ப்பு வருவதும் தெரியாது, போவதும் தெரியாது.

30. வாய்ப்புக் குறைவு என்று கூறுவது பலவீனமான சஞ்சல மனம். உண்மையில் வாய்ப்புக்கள் நிறைந்துள்ளன என்பதே யதார்த்தம். தன்னை வளர்க்க, உருவாக்க, தயார்படுத்த பொருத்தமான காலம் இளமைப்பருவமாகும். இந்த உலகம் ஆர்வமுள்ளவர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ள நன்கொடையாகும் அதை அறிந்து உலகை நல்லவிதமாக பயன்படுத்த வேண்டும்.

வரிகளுக்கு சொந்தக்காரர் – மகாகவி காளிதாசர
்.



Back to top Go down
chithran
newbie
newbie
chithran


Posts : 22

நம்பிக்கையைத் தூண்டும் வழிகள். Empty
PostSubject: nice lines...   நம்பிக்கையைத் தூண்டும் வழிகள். EmptyThu Aug 23, 2012 12:28 am

Good Inspiration...
Back to top Go down
மதன்
Super Hero Member
Super Hero Member
மதன்


Posts : 506

நம்பிக்கையைத் தூண்டும் வழிகள். Empty
PostSubject: Re: நம்பிக்கையைத் தூண்டும் வழிகள்.   நம்பிக்கையைத் தூண்டும் வழிகள். EmptyThu Aug 23, 2012 12:46 am



நன்றி!!! chithran
Back to top Go down
Sponsored content





நம்பிக்கையைத் தூண்டும் வழிகள். Empty
PostSubject: Re: நம்பிக்கையைத் தூண்டும் வழிகள்.   நம்பிக்கையைத் தூண்டும் வழிகள். Empty

Back to top Go down
 
நம்பிக்கையைத் தூண்டும் வழிகள்.
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: பொதுவான தகவல் - General Information :: கதைகள்,கட்டுரைகள்,பொதுவான தகவல்கள்-
Jump to: